அகதி என்று பரிதாபப்பட்டு குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததால் சிக்கலில் திருச்சபை

Report Print Balamanuvelan in கனடா
260Shares
260Shares
lankasrimarket.com

கனடாவில் அகதிகளுக்கு திருச்சபைகள் உதவுவது வழக்கம், அந்த வகையில் உதவியைப் பெற்று குடியுரிமையும் பெற்ற ஒருவன் கனடா குடிமகளான ஒரு சிறுமியையே கொலை செய்துள்ளதால் திருச்சபைகள் ஆடிப்போயுள்ளன.

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிரிய அகதி ஒருவன் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கனடாவுக்கு வந்தான்.

அவர்களை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு Bowen Islandஇலுள்ள ஒரு அமைப்பும் Vancouverஇலுள்ள tight-knit faith community என்னும் திருச்சபை அமைப்பும் உதவின.

அந்த அகதிதான் Burnabyயில் Marrisa Shen (13) என்னும் சிறுமியைக் கொலை செய்த Ibrahim Ali.

தற்போது இரக்கப்பட்டு அகதிகளுக்கு உதவிய இந்த அமைப்புகள் இச்சம்பவத்தால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன.

இந்த விடயம் நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து எதுவும் பேச இயலாது என்று குறிப்பிட்டுள்ள திருச்சபை, பொலிசாருக்கு எல்லா ஒத்துழைப்பும் அளிக்க உள்ளதாகவும் பாதிக்கப்பட்டோருக்காக பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்