இயற்கை வளங்களில் ஒன்றான ராக்கி மலைத்தொடர் பற்றிய சில தகவல்கள்

Report Print Jayapradha in கனடா

ராக்கி மலைத்தொடர் பொதுவாக ராக்கீஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த மலைத்தொடர் வட அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள ஓர் பெரும் மலைத்தொடர் ஆகும்.

இம்மலைத் தொடர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வடக்கில் தொடங்கி ஐக்கிய அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலம் வரை 3,000 மைல்களுக்கு நீண்டுள்ளது.

சுமார் 55- 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்க நில பலகையின் மீது பசிபிக் நில பலகை மோதி ஏற்பட்ட விளைவால் வட அமெரிக்க கண்டத்தில் பல மலைத்தொடர்கள் உருவாகின, இதில் முதன்மையானதும் நீளமானதும் ராக்கி மலைத்தொடர் ஆகும்

கொலராடோ மாநிலத்திலுள்ள 14,433 அடி உயரமுடைய எல்பர்ட் மலை ராக்கி மலைத்தொடரின் மிக உயரமான மலையாகும்.

ராக்கி மலைத்தொடரின் அகலம் 70 முதல் 300 மைல்கள் ஆகும். இம்மலையில் சுற்றுலாபயணிகளுக்கான பார்வையிடங்கள் அதிகம் உள்ளன.

பசிபிக் பலகை குறைவான ஆழத்தில் வட அமெரிக்க பலகைக்கு கீழ் பல ஆண்டுகளாக சென்றதால் ராக்கி மலைத்தொடர் ஏற்பட்டது, அதனாலாயே கடற்கரைக்கு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கொலராடோ மாநிலத்தில் இம்மலைத்தொடர் உள்ளது.

இன்று இம்மலைத்தொடர் பூங்காக்களாவும் மிகப்பெரிய பொழுதுபோக்கு சுற்றுலா தலங்களாகவும் பிரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

மலையேற்றம், பனிச்சறுக்கு, மீன்பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய மலைத்தொடர் இதுவாகும்.

ஐரோப்பியர்களாலும் அமெரிக்கர்களாலும் இம்மலைத் தொடரில் தனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டும் நிறைய மனிதர்கள் இங்கு குடியேறாததால் இது மக்கள் அடர்த்தி குறைந்த இடமாகவே உள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் வரையரைப்படி மொன்டானாவிலும் ஐடகோவிலும் உள்ள கேபினட் மலைத்தொடரும் சாலிஸ் மலைத்தொடரும் ராக்கி மலைத்தொடரைச் சார்ந்தவை.

மேலும் இங்குள்ள டைனோசர் தேசிய நினைவகம், ஸ்டேசன்ஸ் ஆப் த க்ராஸ், பைக்ஸ் பீக், டிரினட் வரலாற்று அருங்காட்சியகம், கொலராடோ வசந்த கால நற்கலை மையம், பாஸ்க்யூ பிளாக், அலமோசா தேசிய வனவிலங்கு அடைக்கலம் மற்றும் டென்வர் கலை அருங்காட்சியகம் போன்றவை இங்கு வரும் சுற்றுலா பயணிகளை பெருமளவு ஈர்த்து வருகின்றது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்