கனடாவில் நடிகை ரம்பாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது

Report Print Deepthi Deepthi in கனடா
536Shares
536Shares
ibctamil.com

தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகை ரம்பா, இலங்கை தமிழரான ர் இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டில் ஆனார்.

இவர்களுக்கு லாண்யா, சாஷா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நடுவில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்ந்தார்.

இறுதியில் இருவரும் தங்களுக்கு இடையே இருந்த மனஸ்தாபங்களை முடித்துகொண்டு சேர்ந்து வாழ முடிவெடுத்தனர்.

அதன் அடிப்படையில் நீதிமன்றம் உதவியோடு இப்போது இருவரும் இணைந்து வாழ்கின்றனர்.

மூன்றாவது முறையாக கர்ப்பமான ரம்பாவிற்கு வளைகாப்பு செய்யப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலானது.

தற்போது ரம்பா மூன்றாவது முறையாக கனடாவில் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தை செப்டம்பர் 23ம் திகதி பிறந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்