அதிகமாக குறட்டை விட்டு தூங்கிய கனடிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in கனடா
378Shares
378Shares
ibctamil.com

கனடாவில் குறட்டை விட்டு தூங்கும் பெண்ணால் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்பட்டதால் அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கியூபெக் மாகாணத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணொருவர் வாடகைக்கு குடியிருந்த நிலையில் அவருக்கு தூங்கும்போது ரொம்ப குறட்டை வருமாம்.

தூங்க ஆரம்பித்தவுடன் இந்த குறட்டை சத்தம் அங்கிருப்பவர்களை ரொம்பவே தொந்தரவு செய்திருக்கிறது.

இது குறித்து அப்பெண்ணிடம் பேசிய வீட்டு உரிமையாளர் குறட்டை பிரச்சனை குறித்து மருத்துவரை ஆலோசிக்க கூறியுள்ளார்.

ஆனால் இதை அப்பெண் கேட்காத நிலையில் குறட்டை தொந்தரவு தொடர்ந்தது.

இதனால் கோபமடைந்த உரிமையாளர் நீதிமன்றத்தை அணுகி பெண்ணை வீட்டை காலி செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.

அதே சமயம் அப்பெண்ணும், வீட்டு உரிமையாளர் தன்னை தொந்தரவு செய்தவதாகவும், அவரது செயலால் தன்னால் நிம்மதியாக தூங்கவே முடியவில்லை என்றும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், குறட்டை பெண் அளித்த புகாரை மறுத்துவிட்டனர்.

அதோடு குறட்டை சத்தம் அளவுக்கு அதிகமாகவே கேட்பதாகவும் கூறினர். இறுதியாக, குறட்டைக்கு போய் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்து கொள்ளுமாறும் தீர்ப்பு கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்