காதலியின் குழந்தையை அடித்துக் கொன்ற கனேடியர் கைது

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் தனது காதலியின் குழந்தையை அடித்துக் கொலை செய்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் Winnipeg பகுதியில் Drake Catcheway என்னும் 21 மாதக் குழந்தை ஒன்று பேச்சு மூச்சற்றுக் கிடப்பதாக வந்த தகவலின்பேரில் விரைந்து சென்ற பொலிசார் அந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிகிச்சை பலனின்றி குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்தான். பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை பலமாக தாக்கப்பட்டுள்ளதாகவும், தலையில் மூன்று காயங்கள் மற்றும் குழந்தையின் சிறுநீரகம், வயிறு மற்றும் நுரையீரலில் இருந்து இரத்தம் வந்திருந்ததாகவும் தெரிவித்தனர்.

குழந்தையின் தாயான April Thompson, தனது குழந்தை தூங்குகிறான் என்று முதலில் எண்ணியதாகவும் பின்னர் அவனை எழுப்பும்போது அவன் விழிக்காததால் சந்தேகம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

விசாரணையில் April Thompsonஇன் புதிய காதலரான Allen Joseph Frier Beardy (22) என்னும் நபர்தான் குழந்தையை தாக்கியதாக தெரியவந்துள்ளது.

ஏற்கனவே இரண்டுமுறை அதே நபர் குழந்தையை தாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக் குற்றச்சாட்டின் பேரில் Allen Joseph Frier Beardy கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers