ஆப்ரேஷனுக்கு முன்னாடி இதை செய்யுங்க: சிறுமியின் கோரிக்கையை நிறைவேற்றிய மருத்துவர்..நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் தனக்கு நடக்கும் ஆப்ரேஷனுக்கு முன்னர் தனது கரடி பொம்மைக்கும் ஆப்ரேஷன் செய்யவேண்டும் என மருத்துவரிடம் சிறுமி கோரிய நிலையில் அதை மருத்துவர் நிறைவேற்றியுள்ளார்.

ஹலிபாக்ஸ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிறுமி ஒருவர் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் இருந்த நரம்பு மண்டல மருத்துவர் டேனியல் மெக்னீலே சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய தயாரானார்.

அப்போது, தனக்கு சிகிச்சையளிக்கும் முன்னர் தனது கரடிபொம்மைக்கும் அறுவை சிகிச்சை செய்ய சிறுமி மழலைத்தனமாக கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்ற மருத்துவர் டேனியல் கரடி பொம்மையின் வாய் மற்றும் மூக்கு பகுதியில் சிறிய முகமூடியை வைத்து மூடினார்.

பின்னர் மனிதர்களுக்கு செய்வது போல பொம்மையில் உடலில் நூல்களை வெட்டி ஆப்ரேஷன் செய்தார்.

இந்த விடயத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் மருத்துவர் டேனியல் வெளியிட்டுள்ள நிலையில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்