கனடாவில் ஊதிய அதிகரிப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Report Print Kavitha in கனடா

கனடாவின் தென்கிழக்கு பகுதியிலுள்ள நோவா ஸ்கோடியா மாகாணத்தில் 15 டொலராக ஊதியத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

கிளம் நூலகத்திற்கு முன்பாக நேற்று மாணவர்கள், ஊழியர் பிரதிநிதிகள் மற்றும் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நோவா ஸ்கோடியா மாகாணத்திலுள்ள இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குறித்த நூலகத்திற்கு முன்னிருந்து தொழிலாளர் அமைச்சு மற்றும் உயர்கல்வி அலுவலகம் வரை பேரணியாக சென்றுள்ளனர்.

ஒக்டோபர் முதலாம் திகதிவரை நோவா ஸ்கோடியாவின் குறைந்தபட்ச ஊதியமானது 11 டொலராகக் காணப்படுகிறது. எனவே, இது மிகவும் குறைவானதாகும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கனடாவில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும் மாகாணமாக நோவா ஸ்கோடியா விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers