கனடாவில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு: தந்தையின் நெஞ்சை உலுக்கும் வார்த்தைகள்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் திடீரென காணாமல்போன ஒரு பெண் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் தனது மகளின் மரணம் குறித்து அவரது தந்தை கூறிய வார்த்தைகள் நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்துள்ளன.

Manitobaவைச் சேர்ந்த, ஆறு குழந்தைகளுக்கு தாயான Mary Madeline Yellowback (33) தனது உடல் நலக் குறைவு காரணமாக, மருத்துவப் பரிசோதனைக்காக Winnipeg வந்திருந்தார்.

கடந்த வியாழனன்று அவர் தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து திடீரென மாயமானார்.

பொலிசார் அவரது புகைப்படங்களை வெளியிட்டு அவரை மும்முரமாக தேடி வந்த நிலையில், நடுத்தர வயதுள்ள ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக பொலிசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது.

Winnipegஇலுள்ள ஒரு ரீசைக்ளிங் டெப்போ ஒன்றில் Maryயின் உடல் கிடைத்தது. அவர் எப்படி இறந்தார், அவர் எப்படி அந்த ரீசைக்ளிங் டெப்போவுக்கு சென்றார் என்பது போன்ற எந்த கேள்விகளுக்கும் தற்போது பொலிசாரிடம் பதில் ஏதுமில்லை.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய Maryயின் தந்தையான Rex Ross, தனது மகள் இப்படி திடீரென காணாமல் போவாள் என எண்ணியதில்லை என்று தெரிவித்ததோடு, தனது மகளின் உடலாவது கிடைத்ததற்கு தான் மிகவும் நன்றியுடையவனாக இருப்பதாகத் தெரிவித்தார்.

அவளது உடலை ஒரு ரீசைக்ளிங் பின்னில் போட்டதை நாங்கள் அதிர்ஷ்டமாக எண்ணுகிறோம் என்று அவர் கூறிய வார்த்தைகள் கேட்போர் மனதை உடைக்கும் விதமாக அமைந்தன.

அவர் அப்படிக் கூறியதற்கு காரணம், 2004ஆம் ஆண்டு Rex Rossஇன் சகோதரியின் மகள் இதேபோல் Winnipegஇல் காணாமல் போனாள், அவளது உடல் கடைசி வரை கிடைக்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றுவரை பல பெற்றோர்களின் மகள்கள் காணாமல் போயிருக்கிறார்கள், அவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்று அவர்களது பெற்றோருக்கு இன்றுவரை தெரியவே தெரியாது என்கிறார் Rex Ross.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers