கனடாவில் வேலை பார்த்துக் கொண்டே படித்து வந்த தமிழக இளைஞர் பரிதாப பலி! வெளியான புகைப்படம்

Report Print Santhan in கனடா
1219Shares
1219Shares
ibctamil.com

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கனடாவில் கார் விபத்தில் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் Naveen Raj. 24 வயதான இவர் கனடாவின் Oshawa பகுதியில் உள்ள Durham கல்லூரியில் MBA படித்து வந்துள்ளார்.

படிப்பிற்கு இடையே அவர் பகுதி நேர வேலையாக அங்கிருக்கும் பிட்சா கடையில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 2 மணிக்கு நவீன் ஹோண்ட சிட்டி கருப்பு நிற காரில் வேலையை முடித்துவிட்டு அங்கிருக்கும் Taunton சாலையின் மேற்கு மற்றும் Thornton சாலையில் வடக்கு பகுதியை இணைக்கும் டிராபிக் சிக்னலில் நின்றுள்ளார்.

அந்த நேரத்தில் பின்னால் வந்த கார் ஒன்று அதிவேகமாக அவரின் கார் மீது பின்னால் அதிவேகத்தில் பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் காரின் உள்ளே இருந்த நவீனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதே சமயம் விபத்தை ஏற்படுத்திய நபர் மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது. அவரின் வயது 36 எனவும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து நவீனின் நண்பர் ஆதி கூறுகையில், நவீன் இரவு நேரத்தில் இங்கு பகுதி நேர வேலை பார்த்து வருகிறான். அது அவனுடைய படிப்பிற்கு உதவியாக இருந்தது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த சமயத்தில் அவரது குடும்பத்தினர் கனடாவிற்கு வர முடியாது என்கிற காரணத்தினால், நண்பர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகம் நவினின் உடலை இந்தியாவிற்கு அனுப்ப அனைத்து வேலைகளிலும் ஈடுபட்ட வருவதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்