பயங்கரவாத அமைப்புக்கு நிதி வழங்கிய இஸ்லாமிய அமைப்பு: கனடா விதித்த தடை உத்தரவு

Report Print Raju Raju in கனடா
109Shares
109Shares
ibctamil.com

காஷ்மீர் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்புடைய குழுவுக்கு நிதி வழங்கியதால் இஸ்லாமிய அமைப்புக்கு கனடா அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக கனடாவை சேர்ந்த குளோபல் நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

வட அமெரிக்க - கனடா இஸ்லாமிய கூட்டமைப்பு (ஐஎஸ்என்ஏ கனடா) காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் அமைப்புக்கு தொடர்புடைய குழுவுக்கு நிதி வழங்கியுள்ளது.

எனவே ஐஎஸ்என்ஏ கனடா அமைப்புக்கு அடுத்து ஓராண்டுக்கு கனடா அரசு தடை விதித்துள்ளதோடு, 5,50,000 டொலர்கள் அபராதமும் விதித்துள்ளது.

இதுதொடர்பாக கனடா நிதியமைச்சகம் நடத்திய சோதனையில் கடந்த 2007 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் ஐஎஸ்என்ஏ கனடா அமைப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஆர்ஓகேஎம் என்னும் அமைப்புக்கு 90000 டொலர்கள் நிதியளித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் கூடுதலாக 46000 டொலர்களும் ஆர்ஓகேஎம் அமைப்புக்கு நிதி திரட்டிய கனடாவை சேர்ந்த காஷ்மீர் நிதியுதவி மையத்துக்கு அளித்துள்ளது.

இந்த ஆர்ஓகேஎம் அமைப்பானது பாகிஸ்தானை சேர்ந்த ஜமாத் ஈ இஸ்லாமி அரசியல் கட்சியுடன் தொடர்புடைய ஹிஸ்புல் முஜாஹிதின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையது.

இந்த அமைப்பு இந்தியா, ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா உள்ளிடட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்