பெண் ராணுவ வீரர்கள் குளிப்பதை ரகசியமாக படம்பிடித்த அதிகாரிக்கு சிறை

Report Print Balamanuvelan in கனடா
258Shares
258Shares
ibctamil.com

கனடா ராணுவ அதிகாரி ஒருவர் தன் சக பெண் ராணுவ அதிகாரிகளின் குளியலறையில் ரகசியமாக கெமராக்களை மறைத்து வைத்து அவர்கள் குளிப்பதை படம் பிடித்த குற்றத்திற்காக சிறைக்கு செல்கிறார்.

கனடா ராணுவத்தில் பெரிய பொறுப்பு ஒன்றை வகிக்கும் ராணுவ அதிகாரியாகிய Mardie Reyes, பலமுறை இவ்வாறு குளியலறைக் காட்சிகளை படம் பிடித்ததாக ஒப்புக்கொண்டதன்பேரில் அவருக்கு ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நேற்று அவருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் Edmontonஇல் தனது தண்டனைக் காலத்தை அனுபவிக்க இருக்கிறார்.

அத்துடன் அவரது பட்டமும் Master Warrant Officer என்னும் நிலையிலிருந்து சார்ஜண்ட் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரிடம் பயிற்சி பெறும் ஒரு பெண் ராணுவ வீரர் மீது அவர் கண் வைத்ததாகவும், ராணுவ சீருடை அணிந்த வீரர்கள் மற்றும் அவரது சகாக்கள் முன்னிலையிலேயே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அந்த பெண் ராணுவ வீரரின் பாதுகாப்பு கருதி அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்