கருக்கலைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்: கொடூரமாக தாக்கிய இளைஞர்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் கருக்கலைப்பு மற்றும் கருணைக்கொலைக்கு எதிராக அமைதி வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் காலால் எட்டித் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோ ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில் குறித்த இளைஞர் பணிபுரியும் நிறுவனமானது அவரை பணி நீக்கம் செய்துள்ளது.

சம்பவத்தன்று டொராண்டோ பகுதியில் கருக்கலைப்பு மற்றும் கருணைக்கொலைக்கு எதிராக குறிப்பிட்ட அமைப்பினர் அமைதி வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கருக்கலைப்பு மற்றும் கருணைக்கொலைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பாதாகைகளையும் அவர்கள் வைத்திருந்தனர்.

அப்போது அப்பகுதிக்கு வந்த இளைஞர் ஜோர்டான் ஹன்ட் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களது பதாகைகளையும் சேதப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட Bissonnette(27) என்பவர் ஜோர்டானை எச்சரித்ததுடன், கருக்கலைப்புக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜோர்டான் அவரை காலால் எட்டி மிதித்துள்ளார். இதில் நிலைதடுமாறிய Bissonnette தரையில் சரிந்துள்ளார்.

அப்பகுதியில் இருந்தவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததும் ஜோர்டான் அங்கிருந்து மாயமானதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பில் விசாரிப்பதாக பொலிசார் உறுதியளித்துள்ளனர். ஞாயிறு அன்று நடந்த இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை கைது நடவடிக்கை ஏதும் நடைபெறவில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers