விளையாட்டுப் போட்டியைப் பார்ப்பதற்காக பணம் சேர்த்த பெற்றோர்: இரண்டு வயது மகன் செய்த செயல்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் கால்பந்தாட்டப் போட்டிக்கு டிக்கெட் வாங்குவதற்காக நீண்ட காலமாக சிறிது சிறிதாக பணம் சேர்த்தனர், ஆனால் அவர்களது இரண்டு மகன் செய்த செயலால் அவர்களது கால்பந்தாட்டக் கனவு கலைந்து போனது.

Utahவைச் சேர்ந்த Ben மற்றும் அவரது மனைவியான Jackee Belnap இருவரும் கால்பந்தாட்டத்திற்கு டிக்கெட் வாங்குவதற்காக கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்தனர்.

கடந்த வாரம் அந்த பணத்தை கொடுக்க முடிவு செய்த அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அவர்கள் சேர்த்து வைத்திருந்த பணம் வைத்திருந்த கவரைக் காணவில்லை.

இருவரும் வீடு முழுவதும் தேடும்போது, முக்கிய ஆவணங்களை குப்பையில் போடும் முன், அவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டும் இயந்திரத்தில் அந்த பணம் இருப்பதை Jackee கண்டுபிடித்தார்.

அவர்களது மகனான Leo அந்த பணம் முழுவதையும் அந்த இயந்திரத்தில் போட்டு துண்டு துண்டாக வெட்டிப் போட்டிருந்தான்.

அவர்கள் சிறுகச் சிறுகச் சேர்த்த 1,060 அமெரிக்க டொலர்களும் குப்பையாகக் கிடந்தன. அவ்வளவுதான், அவர்களது கால்பந்தட்டக் கனவு கலைந்து போனது.

பணமும் போய், கால்பந்தாட்டமும் பார்க்க இயலாமல், மகனையும் திட்ட வழியில்லாமல் அவர்கள் தடுமாறிப்போனபோது பக்கத்து வீட்டுக்காரர் ஒரு நல்ல செய்தி சொன்னார்.

அது என்னவென்றால், துண்டுகளாக வெட்டப்பட்ட அந்த பணத்தை அப்படியே கவரில் அடைத்து பத்திரமாக அமெரிக்காவின் கஜானாவுக்கு அனுப்பி வைத்தால் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் அவர்களது பணம் அவர்களுக்கு திரும்பக் கிடைக்கும். என்றாலும் அவர்களது கால்பந்தாட்டக் கனவு கலைந்தது, கலைந்ததுதான்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்