வீட்டை விட்டு வெளியே போ! கணவரை துரத்தியடித்த மனைவி... அதிர்ச்சி பின்னணி

Report Print Raju Raju in கனடா

கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த மனைவி அவரை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்தவர் ஜேம்ஸ் ரோசேண்டேல் (34). இவருக்கு ஜொடி (35) என்ற மனைவி உள்ளார்.

ஜேம்ஸ், ராணுவத்தில் குதிரைப்படையில் பணிபுரிந்த நிலையில் உடன் பணிபுரியும் கோலிட் (34) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கோலிட்டை தனது வீட்டுக்கு ஜேம்ஸ் அழைத்து வந்த நிலையில் ஜேம்ஸின் மனைவி ஜொடி கோலிட்டுடன் நட்பாகியுள்ளார்.

இந்நிலையில் நட்பையும் தாண்டி ஜேம்ஸுக்கும், கோலிடுக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது.

முக்கியமாக கனடாவுக்கு இருவரும் வேலை பயிற்சி விடயமாக சென்ற போது இருவரும் அதிகமாக நெருக்கமாகியுள்ளனர்.

இது குறித்து அங்கிருந்தவர்கள் மூலம் அறிந்துள்ளார் ஜேம்ஸின் மனைவி ஜொடி.

இதையடுத்து கணவருடன் சண்டை போட்ட அவர், ஜேம்ஸை வீட்டை விட்டு வெளியேற சொன்னதோடு, ராணுவ குடியிருப்பில் தங்கி கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஜேம்ஸ், கோலிட்டின் தொடர்பு ராணுவ உயர் அதிகாரிகளுக்கு தெரிந்த நிலையில் இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும், இருவரும் வெவ்வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படலாம் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers