பருமனான பெண்களை குண்டுப் பெண்கள் என வர்ணித்த விளம்பரம்: பெண்களின் ரியாக்‌ஷன்

Report Print Balamanuvelan in கனடா
141Shares
141Shares
ibctamil.com

ஆங்கிலத்தில் பருமனான பெண்களை ப்ளஸ் சைஸ் என்று சொல்வார்களே தவிர குண்டுப் பெண் (Fat) என்று சொல்ல மாட்டார்கள்.

ஆனால் பிரபல வர்த்தக நிறுவனமான வால்மார்ட் சமீபத்தில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக விமர்சனங்களை எதிர் கொண்டுள்ளது.

கனடா வால்மார்ட்டின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த விளம்பரம் ஒன்றில் குண்டுப்பெண்களுக்கான பூப்போட்ட நீச்சல் உடை என்ற vaasakam ezuthappattirunthathu.

வெப்பமான கோடையை செலவிடுவதற்கு குண்டுப் பெண்களின் சிறந்த சாய்ஸ் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது.

அந்த விளம்பரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த Amanda Hanson என்னும் அழகியல் நிபுணர், ஒரு வேளை அது ஆங்கிலம் தெரியாத இன்னொரு நாட்டைச் சேர்ந்த ஒரு மூன்றாம் தரப்பினர் வெளியிட்ட விளம்பரமாக இருக்கலாம் என்று கூறுகிறார்.

அது மொழிபெயர்ப்பு பிழையாக இருந்தாலும் கூட, விளம்பரம் வெளியிடுவதற்குமுன் வால்மார்ட் நிறுவனம் அதைக் கவனித்திருக்க வேண்டும் என்கிறார் அவர்.

இது குறித்து சமூக ஊடகங்கள் வழியாக மற்ற பெண்களிடம் கருத்துக் கேட்ட போது, அவர்களும் அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கும் Amanda Hanson, இதனால் பலரும் கோபமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தவறுக்காக வால்மார்ட் கனடா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளதோடு, அது தங்களுடைய கருத்து அல்ல என்றும், மூன்றாம் தரப்பினரின் விளம்பரம் அது என்றும் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி வால்மார்ட் கனடா நிறுவனம் அந்த தயாரிப்பையே தங்கள் நிறுவனத்திலிருந்து நீக்கி விட்டது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்