கனேடியர் வாழ்க்கையை சிதைத்த இந்திய போலி வைரம்: தலைமறைவான வைர வியாபாரி

Report Print Arbin Arbin in கனடா

கனடாவை சேர்ந்த அதிகாரி ஒருவர் சுமார் 200,000 டொலர் தொகைக்கு வாங்கிய போலி வைரத்தால் அவரது காதல் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவை சேர்ந்த பால் அல்போன்சா என்ற அதிகாரி கடந்த 2013 ஆம் ஆண்டு இந்திய வைர வியாபாரியான நீரவ் மோடியிடம் இருந்து ஹாங்காங் நாட்டில் வைத்து இரண்டு வைர மோதிரம் வாங்கியுள்ளார்.

இந்த வைரத்தின் மதிப்பு 200,000 டொலர். ''3.2 கேரட் ரவுண்ட் பிரில்லியண்ட் டயமண்ட் கட், டி கலர், விவிஎஸ்1'' ரக மிக உயர்ந்து மதிப்பு கொண்ட வைரம் ஆகும். இந்த நிலையில் தனது காதலியுடனான நிச்சயத்தின் போது, இந்த 200,000 டொலர் வைர மோதிரத்தை அல்போன்சா தன்னுடைய காதலிக்கு அணிவித்துள்ளார்.

ஆனால் சென்ற வருடம் இந்த வைரம் மீது இருவருக்கும் சந்தேகம் வந்துள்ளது. குறித்த வைரமானது நிறம் மங்கியதன் காரணத்தால் சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த வைரத்தை சோதனை செய்து இருக்கிறார்கள். அதன்பின்பே அந்த வைரம் போலி என்று தெரிந்துள்ளது.

இதை அவர்களால் நம்ப முடியவில்லை. இந்த வைரத்தை வாங்கி ஏமாந்ததன் காரணத்தால் அல்போன்சாவிற்கும் அவரது காதலிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, சில நாட்களிலேயே இருவரும் பிரிந்துவிட்டதாக அல்போன்சா தெரிவித்துள்ளார்.

கனேடியரை போலி வைரத்தால் ஏமாற்றிய நிரவ் மோடி என்பவர் மீது பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2 பில்லியன் டொலர் சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

பிரபலங்கள் எல்லோரும் இவர் நிறுவனத்தில்தான் வாடிக்கையாளராக இருக்கிறார்கள். இவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.

ஏற்கனவே நீரவ் மோடிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தில் விற்கப்பட்ட நகைகளில் பல போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் நிறைய வைர நகைகளில் கலப்படம் செய்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து இருக்கிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers