காருக்கு அடியில் சிக்கி கொண்ட நபர்: நேர்ந்த சோக சம்பவம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் சாலையை கடக்க முயன்ற பாதசாரி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

டொரண்டோவில் உள்ள குயின் தெரு பகுதியில் தான் இச்சம்பவம் திங்கட்கிழமை மாலை நடந்துள்ளது.

பொலிசார் கூறுகையில், குறித்த பாதசாரி சாலையை கடக்கும் போது அவ்வழியே சென்ற காரின் அடியில் சிக்கி கொண்டார்.

சம்பவ இடத்துக்கு உடனடியாக மருத்துவர்கள் வந்த நிலையிலும் அவர் உயிரிழந்தார் என கூறியுள்ளனர்.

இதையடுத்து சம்பவம் நடந்த சாலை, Don Valley Parkway மற்றும் Broadview Avenue பகுதிகளின் சாலைகள் மூடப்பட்டன.

இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers