கனடாவில் எரிவாயு குழாய் வெடிப்பு: 100பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

Report Print Balamanuvelan in கனடா
218Shares
218Shares
ibctamil.com

கனடாவில் எரிவாயு குழாய் ஒன்று வெடித்ததில் அந்த இடத்தினருகில் வசிக்கும்

நூற்றுக்கும் மேலானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

கனடாவின் Prince George என்னும் நகருக்கு அருகில் நேற்று மாலை மணி 5.45க்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய் ஒன்று திடீரென வெடித்தது. இதனால் அந்த குழாய் பயங்கரமாக தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இந்த சம்பவத்தையொட்டி அப்பகுதிக்கு அருகில் வசிக்கும் 100க்கும் மேலானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்த எரிவாயு குழாய் வெடிப்பு நகருக்கு வெளியே ஏற்பட்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அந்த எரிவாயு குழாய்க்கு உரிமையான நிறுவனத்தார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீ பரவாமல் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

எரிவாயு வழங்கலும் நிறுத்தப்பட்ட நிலையில், எரிவாயு குழாய் வெடித்ததற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

சம்பவத்தை தொலைவிலிருந்து பார்த்த பலரும் அது தொடர்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்