சாலை விதிகளை மீறிய இளம் தாய்க்கு ஏற்பட்ட இரட்டை சோகம்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் சாலை விதிகளை மீறியதால் தன் மகனை இழந்ததோடு சிறைக்கும் செல்லவிருக்கிறார் ஒரு இளம் தாய்.

ஒண்டாரியோவைச் சேர்ந்த Michelle Hanson (35) தனது மூன்று வயது மகனான Kaden Youngஉடன் ஒரு சிறிய வேனில் பயணித்தார்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் சாலை மூடப்பட்டுள்ளது என்று வைக்கப்பட்டிருந்த போர்டைக் கண்டபிறகும் அந்த பகுதிக்கு தனது வேனில் சென்றார் அவர்.

அங்கு Grand River என்ற நதி பெருக்கெடுத்து ஓடிக் கோண்டிருப்பதையடுத்தே அந்த எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டிருந்தது.

எச்சரிக்கையை மதிக்காமல் சென்ற Michelleஇன் வேன் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்தபோது சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் மகனைக் கையில் பிடித்துக் கொண்டு வெள்ளத்தில் இறங்கினார் Michelle.

வேகமாக ஓடும் வெள்ளத்தின் வேகத்தில் தடுமாறிய அவர் மகனின் கையைப் பிடித்திருந்த பிடியை தவற விட்டார்.

கண் முன்னே மகன் அடித்துச் செல்வதைப் பார்த்துக் கொண்டு நிற்பதைத் தவிர அவரால் எதுவும் செய்ய இயலவில்லை.

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட Kadenஇன் உடல் இரண்டு மாதங்களுக்குப் பின்னர்தான் கிடைத்தது.

இந்நிலையில், Michelle மீது போதையில் இருந்தபோது வாகனம் ஓட்டி உயிரிழப்புக்கு காரணமாக இருந்தது, ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டி உயிரிழப்புக்கு காரணமாக இருந்தது, விதிகளை மீறி வாகனம் ஓட்டி உயிரிழப்புக்கு காரணமாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நவம்பர் மாதம் 6ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers