கனடாவில் தீப்பிடித்து எரிந்த வீடு: உடல் கருகி 3 பேர் பலி

Report Print Raju Raju in கனடா
336Shares
336Shares
ibctamil.com

கனடாவில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

Quebec மாகாணத்தின் Saint-Simeon பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலை தீப்பிடித்தது.

தீயானது வீடு முழுவதும் பரவிய நிலையில் 4.45 மணிக்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்த போது மொத்த கட்டிடமும் தீயில் சேதடைந்தது. தீ அதிகமாக இருந்ததால் வீரர்களால் உடனடியாக வீட்டுக்குள் செல்ல முடியவில்லை.

பின்னர் தீ அணைக்கப்பட்டு வீரர்கள் உள்ளே சென்ற போது வீட்டின் இரண்டாவது மாடியில் மூன்று பேர் சடலமாக கிடந்துள்ளனர்.

இன்னொரு நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்