கனடாவில் இந்தியருக்காக கண்ணீர் விட்ட நூற்றுக்கணக்கானோர்: யார் அவர்?

Report Print Raju Raju in கனடா

கனடாவில் சாலை விபத்தில் உயிரிழந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆசிரியருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்ற நிலையில் பலர் கண்கலங்கியுள்ளனர்.

பிரிட்டீஷ் கொலம்பியாவின் சரே நகரில் உள்ள Tamanawis Secondary பள்ளியில் சுமிந்தர் சிங் (55) என்பவர் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த 5ஆம் திகதி காரில் சென்ற சுமிந்தர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இதையடுத்து பள்ளி வளாகத்தில் கடந்த சனிக்கிழமை சுமிந்தருக்காக இரங்கல்கூட்டம் நடத்தப்பட்டது.

இதை முன்னாள் மாணவரான சுக்மீத் சிங் ஏற்பாடு செய்திருந்தார்.

கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பல மாணவர்கள் சுமிந்தரை நினைத்து கண் கலங்கியதை காணமுடிந்தது.

இது குறித்து சுக்மீத் கூறுகையில், சலிப்பாக இருக்கும் பாடத்தை கூட சுமிந்தர் ஜாலியாக நடந்துவார்.

எந்த மாணவரிடம் இதை கேட்டாலும் அவர்களின் பதில் இதுவாக தான் இருக்கும் என கூறியுள்ளார். சுமிந்தர் இளகிய மனம் படைத்தவர் என பலர் தெரிவித்தனர்.

இதனிடையில் சுமிந்தரின் மாணவர்கள் அவர் பெயரில் உதவித்தொகை வழங்க திட்டமிட்டுள்ளார்கள்.

இதற்காக இதுவரை அவர்கள் $15,000 வரை பணம் வசூலித்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்