கனடாவின் வான்கூவர் தீவில் திடீர் நிலநடுக்கம்!

Report Print Kabilan in கனடா

கனடா நாட்டின் வான்கூவர் தீவில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வான்கூவர் தீவின் சியாட்டலின் வடமேற்கு பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. மேலும், சிறிது நேர இடைவெளியில் 6.8 ரிக்டர் அளவிலும், 6.5 ரிக்டர் அளவிலும் இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

இந்நிலையில், தொடர் நிலநடுக்கங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்