கனடாவில் சூனியக்காரி கைது: சட்டத்தின் பழமையான பிரிவின் கீழ் நடவடிக்கை

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் சூனியம் வைப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றி 5000 டொலர்களுக்கும் அதிகமாக பணம் பறித்த ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கனடா சட்டத்தின் பழமையான ஒரு பிரிவின் கீழ் அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Miltonஐச் சேர்ந்த Dorie "Madeena" Stevenson (32) என்னும் பெண் கடந்த ஐந்து மாதங்களாக பொலிசாரால் கண்காணிக்கப்பட்டு வந்தார்.

சூனியம் எடுப்பதாகக் கூறி ஒருவரிடம் 60,000 டொலர்கள் வரை ஏமாற்றிப் பறித்ததையடுத்து அந்த நபர் பொலிசாரிடம் புகாரளித்தார்.

ஒண்டாரியோவில் Milton Psychic என்ற பெயரில் சூனியம் வைக்கும், எடுக்கும் தொழில் செய்து வந்த Dorie, சூனியம் வைப்பதாக் கூறி பணம் வாங்குவதுண்டு, பணம் கொடுக்கா விட்டால் ஏதாவது கெட்டது நடக்கும் என அஞ்சி பலர் பணம் கொடுத்து ஏமாந்தனர்.

பலர் நகைகள், செல்போன் போன்றவற்றையும் வாங்கிக் கொடுத்ததுண்டு, அவை திருப்பிக் கொடுக்கப்படும் என எண்ணிக் கொடுத்து விட்டு பின்னர் ஏமாற்றப்பட்டதும், அவமானத்தால் வெளியில் சொல்லாமல் இருந்து விடுவதுண்டு.

இந்நிலையில் கனடாவின் குற்றவியல் சட்டம் பிரிவு 365இன் படி சூனியம் வைப்பதாக ஏமாற்றியதாக Dorie கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்