தமிழ் படத்தில் அறிமுகமாகும் கனடா மொடல்

Report Print Kabilan in கனடா

கனடா நாட்டின் மொடல் அழகியான எலிசா, தமிழில் யோகிபாபு நடிக்கும் படத்தில் அறிமுகமாக உள்ளார்.

முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வரும் யோகி பாபு, ’கூர்கா’ எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த மொடலான எலிசா என்பவரும் இந்த படத்தில் முதன்மை நடிப்பதாக, படத்தின் இயக்குநர் சாம் ஆண்டன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சாம் ஆண்டன் கூறுகையில், ‘இந்த கதாபத்திரத்துக்கான தேர்வு சமீபத்தில் நடந்தது. இவரது நடிப்புத் திறனைப் பார்த்து உடனடியாக இவரைத் தேர்ந்தெடுத்து விட்டோம்.

படத்தில் அமெரிக்க தூதராக நடிக்க இருக்கிறார். படத்தில் யோகி பாபுவுக்கும், எலிசாவுக்கும் இடையில் எந்தவித காதல் காட்சிகளும் இல்லை. ஆனால், படத்தில் இவர் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers