தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட கனடா இளம்பெண் மன்னிப்புக் கோரினார்

Report Print Balamanuvelan in கனடா

தாய்லாந்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க புராதன சுவரில் ஸ்பிரே பெயிண்டால் எழுதியதற்காக தாய்லாந்து பொலிசாரால் கைது செய்யப்பட்ட கனடா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் தான் செய்த செயலுக்காக மன்னிப்புக் கோரியுள்ளதோடு இனி நடக்கப்போவதைக் குறித்து நடுக்கத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தனது நண்பர்களுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற கனடா நாட்டைச் சேர்ந்த Brittney Schneider (22) பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு நண்பருடன் தாங்கள் தங்கியிருக்கும் அறைக்கு திரும்பும்போது ஒரு ஸ்பிரே பெயிண்ட் பாட்டில் கிடப்பதைக் கண்டு அதை எடுத்திருக்கின்றார்.

Brittneyயின் நண்பரான Lee, அங்கிருந்த ஒரு சுவரில் Scouser Lee என்று ஸ்பிரே பெயிண்ட் செய்ய, Brittney அதற்கு கீழே B என்று ஸ்பிரே செய்துள்ளார். அவர்கள் ஸ்பிரே செய்த சுவர் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசால் பாதுகாக்கப்படும் ஒரு புராதன நினைவிடம்.

அதை சேதப்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். நடந்த சம்பவத்தை அங்கிருந்த CCTV கெமரா பதிவுகளில் கண்ட தாய்லாந்து பொலிசார் மறுநாள் Brittney மற்றும் Lee இருவரையும் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவர் மீதும் புராதன நினைவிடங்களை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த குற்றத்திற்காக அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 40,000 டொலர்கள் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

இந்நிலையில் தான் செய்த செயலுக்காக Brittney வருத்தம் தெரிவித்துள்ளார்.

நான் செய்த செயலுக்காக மன்னிப்புக் கோருகிறேன், என் வாழ்க்கை என்ன ஆகுமோ என்று பயந்திருக்கிறேன், பலவித உணர்ச்சிகளுக்கு ஆளாகியிருக்கிறேன், எனக்கு வீட்டுக்குப் போனால் போதும் என்று கூறியுள்ளார் Brittney.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers