கனடாவில் விமானத்திலிருந்து விழுந்தவரின் பின்னணி: வெளியான புகைப்படங்கள்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் விமானத்தின் இறக்கை மீது நின்றபடி ஸ்டண்ட் செய்து கொண்டிருந்தபோது கீழே விழுந்து இறந்தவரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் ஒரு ராப் பாடகர் என்பது தெரியவந்துள்ளது.

Jon James McMurray (34) என்னும் அந்த ராப் பாடகர் தனது இசை ஆல்பத்திற்காக விமானத்தின் இறக்கை மீது நின்றபடி ஸ்டண்ட் ஒன்றில் ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார்.

விமானத்தின் இறக்கையின் ஓரத்திற்கே அவர் சென்றுவிட்டதால் விமானம் நிலைதடுமாறி தலை குப்புற விழத்தொடங்கியது.

அந்த சம்பவத்தில் விமானத்திலிருந்து விழுந்த Jon James, விமானத்திற்கும் தரைக்கும் நடுவில் குறைவான தூரமே இருந்ததால் தனது பாராசூட்டை விரிக்க நேரமின்றி வயல் ஒன்றில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆனால் சமாளித்துக் கொண்ட பைலட் சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கி விட்டதால் உயிர் தப்பினார்.

Calgaryயைச் சேர்ந்த Jon James பிரபல பிளேபாய் மொடலான Kali Jamesஇன் (26) கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers