அகதி ஒருவரை உடனடியாக நாடு கடத்த கனேடிய அரசு உத்தரவு: வெளியான பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in கனடா

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட அகதி ஒருவரை உடனடியாக நாடு கடத்த கனேடிய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் எழலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த முடிவுக்கு கனேடிய அரசாங்கம் வந்துள்ளது.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஐ,எஸ் ஆதரவு கருத்துகளை பதிவிட்டதாக கூறி ஜோர்டான் நாட்டவரான ஓத்மான் அயீத் ஹாம்டன் என்பவரை பிரிட்டிஷ் கொலம்பியாவில் வைத்து கனேடிய அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடந்துவந்த நிலையில், கனேடிய பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஹாம்டனால் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதிய குடிவரவு மற்றும் அகதிகள் வாரியம் அவரை உடனடியாக நாடுகடத்த முடிவு செய்துள்ளது.

பாலஸ்தீன நாட்டவரான ஹாம்டன் ஐக்கிய அமீரகத்தில் பிறந்தவராவார். ஆனால் ஜோர்டான் நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு வாஷிங்டன் மாகாணம் வழியாக கனடாவுக்குள் குடியேறிய அவரது புகலிட கோரிக்கையை ஏற்று அகதிக்கான அந்தஸ்து வழங்கியது கனடா அரசு.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் Fort St. John பகுதியில் குடியிருந்து வந்த இவர், பயங்கரவாத தொடர்பு காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு சிறப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இவர் தொடர்பான விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஹாம்டான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் வெள்ளியன்று கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் வாரியம் அவரை உடனடியாக நாடுகடத்த பரிந்துரைத்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்