கனடா அமெரிக்க எல்லையில் குழப்பம் விளைவித்த இருவர் கைது

Report Print Balamanuvelan in கனடா

கனடா அமெரிக்க எல்லையில் குழப்பம் விளைவித்ததாக நேற்று மதியம் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Nova Scotiaவைச் சேந்த இருவர் Woodstock, N.B. மற்றும் Houlton, Maine பகுதிகளுக்கிடையே தாங்கள் பயணித்த காரை நிறுத்தினர்.

கனடா அமெரிக்க எல்லைக்கு நடுவே காரை நிறுத்திய அவர்களிடம் எல்லை அதிகாரிகள் மற்றும் பொலிசார் பேச்சு வார்த்தை நடத்த முற்பட்டபோது அவர்கள் பேச மறுத்தனர்.

இதனால் எல்லையில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக Halifaxஐச் சேர்ந்த 21 வயது நபர் ஒரு வரும் Sackvilleஐச் சேர்ந்த 22 வயது நபர் ஒருவரும் அமெரிக்க எல்லை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வந்த காரும் கைப்பற்றப்பட்டது.

இந்த சம்பவத்தால் பல மணி நேரத்திற்கு எல்லை மூடப்பட்டது. வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்