என்னை நாட்டை விட்டு துரத்தி விடாதீர்கள்: ட்ரூடோவிடம் கெஞ்சும் பெண்

Report Print Balamanuvelan in கனடா

என்னை பிடிப்பதற்காக ரஷ்ய ரகசிய பொலிசார் காத்திருக்கிறார்கள், தயவு செய்து என்னை கனடாவை விட்டு துரத்தி விடாதீர்கள் என புடினை விமர்சிக்கும் ஒரு பெண் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Dr. Elena Musikhina, ரஷ்ய அதிபர் புடினை கடுமையாக விமர்சிப்பவர். ரஷ்ய ராணுவம் உக்ரைனுக்குள் அத்து மீறி நுழைந்ததை விமர்சித்ததற்காகவும், சட்டவிரோதமாக கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டதாக தெரிவித்ததற்காகவும் தனது குடும்பம் ரஷ்யாவில் அதிகாரத்திலுள்ளவர்களை பகைத்துக் கொண்டதாக Elena கருதுகிறார்.

அதுமட்டுமின்றி தனது ஆய்வு, சைபீரியாவிலுள்ள நன்னீர் ஏரியான Baikal ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் ராணுவ நடவடிக்கைகள் கடுமையான சுற்றுச்சூழல் அபாயத்தையும், மாசுவையும் ஏற்படுத்தியதை வெளிப்படுத்தியதாகவும் Elena தெரிவிக்கிறார்.

Elena கூறியுள்ள தகவல்களை அறிந்துள்ள ஐந்துக்கு மேற்பட்ட பிற ஆய்வாளர்கள் மர்மமான முறையில் கோரமாக கொல்லப்பட்டிருப்பதாக Elenaவின் ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

Elenaவின் செல்லப்பிராணியான நாய் சுடப்பட்டதோடு, அவரும் எச்சரிக்கப்படும் விதமாக தலைக்குமேல் சுடப்பட்டிருக்கிறார், விசாரணைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்.

கனடா குடியுரிமை பெற்றவரான Elenaவின் மகளுடன் இணைந்து கொள்வதற்காக Elenaவும் அவரது கணவரான Mikhailம் 2015ஆம் ஆண்டு கனடா வந்தார்கள்.

ஆனால் அகதிகள் பாதுகாப்புக்காக அவர்கள் அளித்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாததோடு மேல் முறையீடுகளும் வெற்றிபெறவில்லை. இந்நிலையில் கனடா எல்லை சேவைகள் ஏஜன்சி அவர்களது நாடுகடத்தப்படும் திகதியை அடுத்த வாரத்தில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

துரதிர்ஷ்டவசமாக கனடா அரசாங்கம் எங்களைக் கைது செய்ய காத்திருக்கும் ரஷ்ய ரகசிய பொலிசாரிடமே எங்களை ஒப்படைப்பதற்காக காத்திருப்பதுபோல் தெரிகிறது என்று கூறும் Elena, தங்களை கனடாவை விட்டு அனுப்பிவிட வேண்டாம் என பிரதமர் ட்ரூடோவைக் கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers