குடியேறிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கனடா முடிவு

Report Print Balamanuvelan in கனடா

2021ஆம் ஆண்டுக்குள் கனடாவிற்குள் அனுமதிக்கப்படும் குடியேறிகளின் எண்ணிக்கையை 350,000ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கனடாவின் குடிவரவு அமைச்சர் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் குடிவரவு துறை அமைச்சரான Ahmed Hussen, 2021இல் கனடா இன்னும் 40,000 குடியேறிகளை ஏற்றுக்கொள்ளும் என்று நேற்று தெரிவித்தார்.

தற்போது 310,000ஆக இருக்கும் அந்த எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து 2021வாக்கில் 350,000தை தொடும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த குடியேறியவர்களின் பெரும்பாலானோர், கனடாவில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை சந்திக்கும் விதமாக திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார திட்டங்களின் கீழ் வருவர். நாடு முழுவதும் பணியாளர் பற்றாக்குறை நிலவுவதாக Ahmed Hussen தெரிவித்தார்.

ஏற்கனவே பல புலம்பெயர்தல் ஆலோசகர்களும் பொருளாதார அமைப்புகளும் கனடாவில் குடியேறிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரி வருகின்றன.

அரசின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலும் 2016இல் 450,000பேரை அனுமதிக்கும்படி ஆலோசனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதிலும் உள்ள குடியேறிகளுக்கு உதவுவதற்கு இன்னும் அதிகம் செய்யப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளும் Hussen, கனடாவிற்குள் அனுமதிக்கப்படும் குடியேறிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒவ்வொரு நாளும் தான் போராடுவதாகத் தெரிவித்தார்.

இத்தகைய திட்டங்களுடன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் துஷ்பிரயோக அபாயத்தில் இருக்கும் 1000 பெண்களையும் , சிறுமிகளையும் கனடாவிற்குள் கொண்டு வரும் திட்டமும் இருப்பதாகவும் Hussen தெரிவித்தார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers