சுகாதாரமற்ற முறையில் மளிகைக்கடையில் வைக்கப்பட்டிருந்த இறைச்சி: வாடிக்கையாளர் எடுத்த அதிரடி நடவடிக்கை

Report Print Balamanuvelan in கனடா

மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கச் சென்ற ஒருவர் சுகாதாரமற்ற முறையில் கடையில் வைக்கப்பட்டிருந்த இறைச்சியைக் கண்டு அதிர்ச்சியும் அருவருப்பும் அடைந்தார்.

அங்கு பணம் செலுத்தும் இடத்திற்கு பின்னால், கடையின் உள்ளிருந்து பொருட்களை சேகரித்து, வாங்குமிடத்திற்கு கொண்டு வர பயன்படுத்தும் தள்ளுவண்டியில் இறைச்சி வைக்கப்படிருந்தது.

அன்று இறைச்சி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டைவிட்டு வந்த Michael Pearl, அந்த கடையில் இறைச்சி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும் இறைச்சி வாங்கும் எண்ணத்தையே கைவிட்டு விட்டார்.

அந்த காட்சியை தனது மொபைலில் புகைப்படம் எடுத்த Michael, அதை அந்த கடையின் மேனேஜரிடம் காட்டியதோடு, டொராண்டோ சுகாதார போர்டுக்கும் அனுப்பி புகார் ஒன்றை பதிவு செய்தார்.

உடனடியாக Michaelக்கு பதிலளித்த சுகாதாரத்துறையினர், தாங்கள் அந்த விடயத்தைக் கவனிப்பதாக உறுதியளித்தனர்.

உடனடியாக செயலில் இறங்கிய சூப்பர் மார்க்கெட் இயக்குநரும், அனைத்து கடைகளுக்கும் இனி இதுபோல் நடக்கக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers