பூர்வக்குடியின பெண்களுக்கு கனடா செய்த அநீதி: நீதி கேட்கும் பெண்கள்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் பூர்வக்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி பெண்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

எலிசபெத் 17 வயதாக இருக்கும்போது குழந்தைகள் நல சுகாதார அலுவலர் ஒருவர் அவரை ஒண்டாரியோ மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச் சென்று அவருக்கு கருக்கலைப்பு செய்ததோடு அவருடைய அனுமதியின்றி அவருக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்ய வைத்தார்.

40 ஆண்டுகளாக அந்த அதிர்ச்சியிலேயே வாழ்ந்து வரும் எலிசபெத் கனடாவின் பூர்வக்குடிமகள்.

புதிதாக ஒரு நாட்டுக்குள் நுழையும் எந்த நாட்டினருமே அந்த நாட்டின் பூர்வக்குடிகளை அங்கிருந்து விரட்டி விட்டு அல்லது ஒரு ஓரமாக ஒதுக்கி விட்டு அந்த நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வது பல காலமாகவே பல நாடுகளிலும் நடந்தே வந்திருக்கிறது.

இந்நிலையில் அதற்கும் ஒருபடி மேலே போய் ஒரு இனத்தையே அழிக்கும் நோக்கில், அடுத்த தலைமுறையே இருக்கக்கூடாது என்னும் நோக்கில், கனடாவிலும் பூர்வக்குடியினரான இளம்பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது, அவர்களுக்கு அடுத்த சந்ததி இருக்கக்கூடாது என்னும் கோர நோக்கத்துடன், அவர்களுக்கு கருத்தடை செய்யும் இத்தகைய ஒரு ஈனச் செயல் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆல்பர்ட்டா, Saskatchewan, Manitoba, ஒண்டாரியோ உட்பட பல பகுதிகளில் இன்னும் இந்த கொடூர செயல் நடைபெற்று வருவதாக புதிய ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒண்டாரியோவின் செனேட்டரான Yvonne Boyerம் Dr. Judith Bartlett என்னும் மருத்துவரும் எவ்வாறு Saskatoon பகுதியில் பூர்வக்குடியின பெண்களுக்கு கொடூரமான முறையில் கருத்தடை செய்யப்படுகிறது என்பதைக் குறித்து செய்தி ஒன்றை பிரசுரித்திருந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட எலிசபெத், Yvonne Boyerஐ அணுகினார்.

அவரைத் தொடர்ந்து பல பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை Yvonne Boyerஇடம் கண்ணீருடம் பகிர்ந்து கொண்டார்கள்.

Yvonne Boyer இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறார்.

இது Saskatoonஇல் நடந்திருக்கிறது, Reginaவில் நடந்திருக்கிறது, Winnipegஇல் நடந்திருக்கிறது, எங்கெல்லாம் பூர்வக்குடியின பெண்கள் அதிகம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த கொடூர செயல் நடைபெற்றிருக்கிறது என்று கூறும் Yvonne Boyer, பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள், ஆளுக்கு 7 மில்லியன் டொலர்கள் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், தற்போது அவர்களுடன் 60 பெண்கள் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

Saskatoonஇல் மட்டுமே 60 பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து பேச முன்வந்திருக்கிறார்கள் என்றால் இன்னும் எத்தனை பேர் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மனதிற்குள்ளேயே போட்டு புதைத்து வைத்திருக்கிறார்களோ தெரியாது என்கிறார் Yvonne Boyer.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers