வாழ்க்கையில் முதல் முறையாக பனிப்பொழிவை ரசித்து விளையாடும் அகதி குழந்தைகள்: கனடா பிரதமரின் ரியாக்‌ஷன்

Report Print Balamanuvelan in கனடா

எரித்ரியாவிலிருந்து கனடாவுக்கு அகதிகளாக வந்துள்ள அகதிக் குழந்தைகள் வாழ்வில் முதன் முறை பனிப்பொழிவை ரசித்து அனுபவிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி காண்போரை பரவசப்படுத்துகிறது.

கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும் அந்த வீடியோவைப் பார்த்து விட்டு, அதை வெளியிட்ட Rebecca Davies என்னும் பெண்மணிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Rebecca Davies டொராண்டோவை தளமாகக் கொண்ட ஒரு தொண்டு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்.

அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கனடாவுக்கு வரும் அகதிகளை ஸ்பான்சர் செய்து, குடியமரவும், கனடாவில் வாழவும் உதவுகிறார்கள்.

Rebecca Davies, எரித்திரியாவிலிருந்து வன்முறைக்கு தப்பி வந்த ஒரு தாய் மற்றும் நான்கு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பத்தை தன்னுடன் தங்க வைத்துள்ளார். அதற்குத்தான் ட்ரூடோ Rebecca Daviesக்கு ட்விட்டரில் வெளியிட்ட ட்வீட் ஒன்றில் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த குடும்பத்தின் இரண்டு குழந்தைகள்தான் அந்த வீடியோவில் பனியில் விளையாடுகிறார்கள்.

வெயிலையே பார்த்து பழகிப்போன அவர்களது கண்களுக்கு பனி வித்தியாசமான ஒன்றாகத் தெரிய, அந்த குழந்தைகள் பனியில் ஓடியாடி விளையாடுவதும், முகத்தில் பனி படுவதை ஜாலியாக அனுபவிப்பதும் Rebecca Davies எடுத்த அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

ட்விட்டரில் அந்த வீடியோ இதுவரை 1.85 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers