கனேடிய மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

Report Print Kavitha in கனடா

கனடாவில் நிலவி வரும் பருவகால மாற்றம் காரணமாக கனடா மக்களுக்கு எதிர்வரும் தினங்களில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கனடாவின் பருவகாலத்திற்கான முதலாவது பலத்த பனிப்பொழிவு எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி ரொறன்ரோவைத் தொட்டுச் சென்றுள்ள நிலையில் சாரதிகள் விழிப்புடனேயே வாகனங்களைச் செலுத்திச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால், சாரதிகள் வழக்கத்தினை விடவும் அதிக தூர இடைவெளி விட்டே வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் மக்கள் வெளியில் செல்லும் போது அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்