மெக் டொனால்ட் உணவகத்தால் எனக்கு இழப்பு: வழக்கு தொடர்ந்துள்ள தந்தை

Report Print Balamanuvelan in கனடா

பொம்மைகளைக் காட்டி என் பிள்ளைகளை ஆசை காட்டுவதால் தன் பிள்ளைகள் இரண்டு வாரத்திற்கொருமுறை மெக் டொனால்ட் உணவகத்தில் சாப்பிட வற்புறுத்துவதாகவும், அதனால் தனக்கு அதிக செலவீனம் ஏற்படுவதாகவும் கூறி கனடாவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Quebecஐச் சேர்ந்த Antonio Bramante என்னும் ஒருவர், தனது பிள்ளைகள் அடிக்கடி மெக் டொனால்ட் உணவகத்தில் சாப்பிட வற்புறுத்துவதாகவும், அதனால் தனக்கு நூற்றுக்கணக்கான டொலர்கள் செலவு ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளைக் கவரும் வகையில் உணவுடன் பிரபல கார்ட்டூன் பொம்மைகளை அந்த உணவகம் வழங்குவதால், எப்படியும் அந்த பொம்மைகளை சேகரித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி மெக் டொனால்ட் உணவகம் சென்று சாப்பிட பிள்ளைகள் தொந்தரவு செய்வதாகக் கூறும் Antonio, அந்த உணவகம் 13 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு சட்ட விரோதமாக விளம்பரம் செய்வதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது மாகாணத்தின் இளைஞர் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி சட்ட விரோதமாகும். Quebec மாகாணம் 13 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு மார்க்கெட்டிங் செய்வதை தடைசெய்கிறது.

அதனால், உலகில் குழந்தைகளை இலக்காகக் கொண்டு விளம்பரம் செய்வதை தடை செய்துள்ள வெகு சில நாடுகளில் கனடாவின் Quebecம் ஒன்று என்னும் புகழை அது பெற்றுள்ளது.

Quebec மாகாணம், 1980ஆம் ஆண்டு உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்காத உணவுகளை விளம்பரம் செய்வதற்கும் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த சட்டங்களை மதிக்கும் கடமை மெக் டொனால்ட் உணவகத்திற்கும் உண்டு என்று கூறும் Antonio, Quebecஇலுள்ள மெக் டொனால்ட் உணவகம் அவற்றை மதிக்கவில்லை என்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்