90 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுப்பிடிக்கப்பட்ட ஏரியில் மூழ்கிய கப்பல்: உள்ளிருந்த பயணிகளின் நிலை என்ன தெரியுமா?

Report Print Raju Raju in கனடா

கனடாவில் 90 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய பயணிகள் கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1888-ஆம் ஆண்டு மாகாஸா என்ற ஏரியில் 39 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பலில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதன் காரணமாக கப்பலானது பெரிய பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தையடுத்து இந்தக் கப்பலில் இருந்த 16 பேர் காப்பாற்றப்பட்டனர்.

மீதமுள்ள பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.இந்நிலையில் இந்தக் கப்பலின் சிதிலமடைந்த பாகங்கள் கடலாய்வாளர்களால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், கப்பலுக்குள் முழுமையாக சைக்கிள் மற்றும் கார் ஒன்று இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கப்பலில் உள்ள பொருட்களை மீட்க கடல் ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளதோடு அதற்கான பணியின் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers