தன்னை விட 45 வயது மூத்தவரை மணந்த பெண் கூறும் வெற்றி வாழ்க்கையின் ரகசியம்

Report Print Balamanuvelan in கனடா

தன்னைவிட 45 வயது மூத்த நபர் ஒருவரை மணந்து மகிழ்ச்சியுடன் வாழும் இளம்பெண்ஒருவர் தங்கள் வாழ்வின் வெற்றியின் ரகசியம் பாலுறவுதான் என்று கூறியுள்ளார்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Stefani Anderson (23), தான் 19 வயதாக இருக்கும்போது தான் வேலை செய்த மதுபான விடுதிக்கு வந்த Don Walper (68) என்பவரை சந்தித்திருக்கிறார்.

அவரைக் கண்டதும் அவர் மீது உடனே காதல் வந்திருக்கிறது Stefaniக்கு. தன்னைவிட வயது அதிகமானவகளையே விரும்பிய Stefaniக்கு Walperஐ மிகவும் பிடித்துப் போக, இருவரும் காதலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

Stefaniயின் தாய் Janet, Walperஐ விட 10 வயது சிறியவர், எனவே அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், இனிமேல் வீட்டுப்பக்கமே வரக்கூடாது என Stefaniயிடம் கூறிவிட்டார்.

திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவெடுத்தபோது, Janet கூறிய முதல் வார்த்தை, Walper என்னை மாமியார் என்று அழைக்கக்கூடாது என்பதுதான்.

தற்போது திருமணம் முடிந்து, தன் மகள் மகிழ்ச்சியாக வாழ்வதைக் கண்டபின், அவரும் தனது மருமகன் மீது அன்பு செலுத்தத் தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் உங்கள் திருமண வாழ்க்கையின் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டால், சட்டென்று சொல்கிறார் Stefani, பாலுறவுதான் என்று.

நாங்கள் காதலிக்கத் தொடங்கியபோது பல முறை உறவு கொண்டோம் என்று கூறும் Stefani, நான், என் வயதுடைய, என்னைவிட 10 வயது மூத்த மற்றும் 15 வயது மூத்த ஆண்களிடமெல்லாம் பழகியிருக்கிறேன், ஆனால், அவர்கள் எல்லாரைவிடவும் Walperதான் சிறந்தவராக இருந்தார் என்று கூறும்போது Stefaniக்கு வெட்கத்தில் கன்னம் சிவக்கிறது.

அதை ஆமோதிப்பதுபோல தலையாட்டும் Walperம், நாங்கள் தினமும், எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் உறவு கொள்வோம் என்கிறார். அவர்களது வெற்றி வாழ்க்கையை நிரூபிப்பதுபோல் தற்போது இருவருக்கும் Lachlan என்னும் ஒன்பது மாதக் குழந்தை ஒன்று இருக்கிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்