கனடாவில் சினிமா பாணியில் துப்பாக்கிச் சூடு... பரிதாபமாக கொல்லப்பட்ட இளைஞர்: கதறும் குடும்பம்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் 410 நெடுஞ்சாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எதிர்பாராதவகையில் அப்பாவி இளைஞர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பீல் பிராந்திய பொலிசார், இந்த மாத துவக்கத்தில் நெடுஞ்சாலை 410-ல் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட இளைஞர் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதில் மர்ம நபர்களுக்கு அடையாளம் மாறியதால் ஜேஸன் ராம்கிஷன் என்ற 23 வயது இளைஞர் கொல்லப்பட்டதாகவும், ஆனால் சில நாட்கள் கடந்த நிலையில் இன்னொரு நபர் அதே நெடுஞ்சாலையில் கொல்லப்பட்டதில் இருந்து இந்த விவகாரம் உறுதியானதாகவும் பொலிசார் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

நவம்பர் 13 ஆம் திகதி நள்ளிரவு ஒரு மனிக்கு 410 நெடுஞ்சாலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடப்பதாகவும், இளைஞர் ஒருவர் குற்றுயிராக கிடப்பதாகவும் பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.

தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் அவசர சிகிச்சை குழுவின் உதவியுடன் குற்றுயிராக கிடந்த ஜேஸன் ராம்கிஷனை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் மருத்துவமமையிலேயே மரணமடைந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய ஜேஸனின் தந்தை Chaitram, தமது மகன் சாலையில் அதிக நேரம் செலவிடும் நபரல்ல எனவும், இதில் ஏதோ திட்டமிட்ட சதி இருப்பதாகவும்,

பொலிசார் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஜேஸனின் மறைவால் மொத்த குடும்பமே கவலையில் ஆழ்ந்துள்ளதாகவும், இந்த படுகொலை தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாரை அணுக வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சம்பவத்தின்போது ஜேஸன் ராம்கிஷன் மீது மர்ம நபர்கள் பல முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்