உயிர் பிழைக்க வந்த இலங்கைத் தமிழரை சாகவிட்டதா கனடா? பதில் கிடைக்காத கண்ணீர்க் கேள்விகள்

Report Print Balamanuvelan in கனடா

இலங்கையில் யுத்தத்துக்கு தப்பி, உயிர் பிழைக்க கனடா வந்த ஒரு இளைஞர் எப்படி இறந்தார் என்பதே தெரியாத நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டபோது, கூடியிருந்த அவரது உறவினர்கள் கதறியழும்போது கேட்ட கேள்விகளில் ஒன்று கனடா ஏன் அவரை சாகவிட்டது என்பதுதான்.

ஆனால் அந்தக் கேள்விக்கு மட்டுமல்ல, அவரது மரணம் தொடர்பான எந்தக் கேள்விக்குமே பதிலில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இலங்கை ராணுவத்தால் கொல்லப்படலாம் என்ற அச்சத்தின்பேரில் தாய்லாந்து வழியாக கனடா வந்தடைந்தனர் Kirushna Kumar Kanagaratnam (37)ம் Piranavan Thangavelம்.

ஏற்கனவே இருவரும் தத்தம் சகோரர்களை யுத்தத்துக்கு பலி கொடுத்திருந்தனர்.

அவர்கள் கனடாவில் புகலிடக் கோரிக்கை வைத்தபோது, தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர். இருவரின் புகலிடக் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன.

பின்னர் 2013ஆம் ஆண்டு இருவரும் சந்தித்த நிலையில், இருவரும் ஆளுக்கொரு பக்கம் போக முடிவெடுத்தனர்.

அப்போதுதான் Piranavan Thangavel கடைசியாக Kanagaratnamத்தை உயிருடன் பார்த்தார்.

அடுத்த முறை 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் Kanagaratnamத்தின் படத்தை மட்டுமே அவர் பார்த்தார்.

கனடாவின் ஓரினச்சேர்க்கையாளனான சீரியல் கில்லர் McArthurஆல் கொல்லப்பட்ட இந்த நபரை அடையாளம் தெரிந்த யாராவது இருந்தால் பொலிசாரை அணுகவும் என ஒடப்பட்டிருந்த போஸ்டர்களில் Kanagaratnamத்தின் படம் இருந்தது.

McArthurஇன் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த உடல்களில் ஒன்று Kanagaratnamத்தினுடையது என பொலிசார் கண்டறிந்ததோடு அவரது புகைப்படத்தையும் McArthurஇன் கம்ப்யூட்டரில் கண்டுபிடித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை Kanagaratnamத்தின் உடல் அடக்கம் செய்யப்படும்போது, அவரது சகோதரர் ஒருவர், கனடா ஏன் உன்னைக் கொன்றது என்று கேட்டு கதறியழ, அவருக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் யாரும் இல்லை, காரணம் அவர்கள் மனதிலும் ஆயிரம் கேள்விகள்.

Kanagaratnam ஏன் கொல்லப்பட்டார்?

அவர் ஓரினச் சேர்க்கையாளர் அல்ல, அப்படியிருக்கும் பட்சத்தில் அவர் ஏன் McArthurஐ சந்தித்தார்?

McArthur ஏன் அவரைக் கொலை செய்தார்? ஏதாவது வேலை கிடைத்தால் போதும் என்று எண்ணி McArthurஇன் தோட்டத்தில் வேலைக்காக சென்றாரா?

எந்த கேள்விக்கும் யாரிடமும் பதிலில்லை.

உயிர் தப்பி வாழ்வதற்காக அகதிகளாக கனடா வந்த எங்களுக்கு கனடா எதுவுமே செய்யவேண்டாம், எங்கள் உயிரைக் காப்பாற்றத்தானே இங்கு வந்தோம் என்று கண்ணீருடன் கூறுகிறார் Kanagaratnamத்தின் சகோதரர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்