கனேடிய பத்திரிகைகளை ஆக்கிரமித்த இந்த கண்ணீர் யாருடையது தெரியுமா?

Report Print Arbin Arbin in கனடா

பணியாற்றிய நிறுவனம் தீக்கிரையாவது கண்டு நொறுங்கி நின்ற யுவதியின் புகைப்படத்துடன் அதிகம் விவாதிக்கப்பட்ட கனேடியன் ஹொட்டல் தீ விபத்தில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த ஹொட்டலில் பணியாற்றிய 28 வயதான ஸ்டீவன் ஹான்ஸ் என்பவரையே பொலிசார் கைது செய்துள்ளனர்.

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கனடவில் உள்ள முக்கிய ஹொட்டல்களில் ஒன்றான வெண்டீஸ் முழுமையாக சேதமடைந்துள்ளது.

அதிகாலையில் வேலைக்கு சென்ற ஊழியர்களே குறித்த ஹொட்டலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதை அறிந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் குறித்த தீ விபத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்றும் ஒரு நிறுவனம் கண்ணுக்கு முன்பே தீக்கிரையாவதை யாருக்கு கண்டு நிர்க்க முடியும். அதே நிலைதான் அந்த ஹொட்டலில் பணியாற்றும் ஊழியரும், இந்தியருமான அயனாவுக்கு ஏற்பட்டுள்ளது.

12-கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் தொடர்ந்து பணியாற்றிய பின்னரே நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தணர்.

கடும் புகை காரணமாக அப்பகுதி மக்களில் பலர் மருத்துவமனையை நாடியதை தவிர ஆளபாயம் ஏதும் ஏற்படவில்லை.

கனடாவில் கல்வி பயின்று வரும் கேரள மாணவி அயனா, பகுதி நேர பணியாக அந்த ஹொட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார்.

ஹொட்டல் தீக்கிரையாவதை கண்ணீருடன் கண்டு நின்ற அயனாவின் புகைப்படத்துடன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

குறித்த ஹொட்டல் உரிமையாளருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகவே கைதான ஸ்டீவன் ஹான்ஸ் ஹொட்டலுக்கு நெருப்பு வைத்துள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்