மின்கம்பத்தில் கார் மோதி இளம்பெண் பலியான சம்பவத்தில் அடுக்கடுக்காக திடுக்கிடும் தகவல்கள்

Report Print Balamanuvelan in கனடா

Burnaby நெடுஞ்சாலை ஒன்றில், கார் ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகி நிற்பதைக் கண்ட சிலர், அருகிலுள்ள பள்ளம் ஒன்றில் ஒரு இளம்பெண் படுகாயமடைந்து கிடப்பதைக் கண்டனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Nicole Porciello (34) என்னும் அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்துக்குள்ளாகி நின்ற அந்த காரில் Jan Poepl (31) என்னும் ஒரு நபரும் மயக்க நிலையில் கிடப்பதைக் கண்ட பொலிசார் அவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வந்த நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலாவது அந்த பெண் உடலில் இருந்த காயங்களின் அடிப்படையில், மின்கம்பத்தில் கார் மோதிய வேகத்தில், Nicole காரிலிருந்து தூக்கி வீசப்பட்டு ஒரு பள்ளத்தில் போய் விழுந்திருக்கிறார்.

அந்த கார் விபத்து ஒரு ஒரு சதித்திட்டம் என்பதை பொலிசார் கண்டறிந்துள்ளனர். இரண்டாவது, Nicole, Jan Poepl என்னும் ஒரு நபரை இரண்டாண்டுகளாக காதலித்து வந்ததாகவும், அவர் Burnabyயில் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜண்டாக பணி புரிந்து வந்ததாகவும் தகவல் கிடைத்தது.

நீண்ட விசாரணையின் முடிவில் Nicoleஇன் மரணத்தில் Jan Poeplஇன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்மீது Nicoleஐ கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Nicoleஇன் மரணம் தொடர்பாக நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஒரு நல்ல தாய், சிறந்த உதவி ஆசிரியை என்று எல்லோராலும் புகழப்படும் Nicole Porciello, Vancouverஇல் உள்ள பள்ளி ஒன்றில் பணி புரிந்து வந்தார். கொல்லப்பட்ட Nicoleக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்