91 வயது மூதாட்டியை காதலிக்கும் 31 வயது இளைஞர்: காரணம் இதுதானாம்

Report Print Vijay Amburore in கனடா

கனடாவை சேர்ந்த 31 வயது இளைஞர் அமெரிக்காவை சேர்ந்த 91 வயது மூதாட்டியை காதலித்து வருகிறார்.

உலகளவில் காதலுக்கு கண்ணில்லை எனப்படும் கூற்று அதிகமான இடங்களில் உண்மையானதாகவே இருந்து வருகிறது.

அதனை காதலிப்பவர்கள் பொய் என கூறினாலும், உறுதிப்படுத்துவதற்கான நிகழ்வுகளும் ஆங்காங்கே நடந்துகொண்டு தான் இருக்கிறது.

அந்த வரிசையில் அமெரிக்காவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தி வரும் நிகழ்வில் இதுபோன்று வினோதமாக இருக்கும் காதலர்களை படம்பிடித்து காட்டுகின்றனர்.

அதில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு காதல் ஜோடி தான், கைல் ஜோன்ஸ் (31) - மார்ஜோரி மெக்குல் (91) என்பவர்கள்.

இருவருக்கும் இடையே 60 வயது வித்யாசம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட காதலை பற்றி அனைவரும் வியப்பாக பார்த்து வருகின்றனர்.

இதுபற்றி ஜோன்ஸ் பேசுகையில், எனக்கு இது முதல்முறை அல்ல. நான் ஏற்கனவே 70, 80 மற்றும் 90 வயதுள்ள பெண்களுடன் டேட்டிங் சென்று உறவு கொண்டுள்ளேன். ஒரு சில ஆண்களுக்கு வயதான பெண்களை தான் பிடிக்கும். அதை போல தான் எனக்கும், வயதானவர்களை பிடித்ததால் அவர்களுடன் டேட்டிங் செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மார்ஜோரி கூறுகையில், ஜோன்ஸ் என்னை காதலிப்பதாக கூறியபோது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. நான் ஆரம்பத்தில் அவனை என்னுடைய ஒரு மகன் போல தான் நினைத்தேன். பிறகு பழக ஆரம்பித்ததும், அவனை மிகவும் பிடித்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்