திருமணம் ஆன ஒரு மணி நேரத்தில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை: நெஞ்சை உருக்கும் வீடியோ வெளியானது

Report Print Raju Raju in கனடா

கனடாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நபர் தனது காதலியை திருமணம் செய்து கொண்ட 1 மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நோவா ஸ்கோடியா மாகாணத்தின் ஹலிபகஸ் நகரை சேர்ந்தவர் கெவின் மெகன்சி.

இவருக்கு கடந்த மே மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனை செய்துள்ளார்.

அப்போது கெவினுக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதும், நோயானது முற்றியிருப்பதும் தெரியவந்தது. இதனால் அவர் சில மாதம் தான் உயிரோடு இருப்பார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதையடுத்து தனது கடைசி ஆசையாக தனது நீண்டநாள் காதலி நான்சியை திருமணம் செய்ய கெவின் விரும்பினார்.

இதையடுத்து மருத்துவமனையில் இருந்தவாறே கெவினுக்கும், நான்சிக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமண ஏற்பாடுகள் நடந்தது.

இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். கெவினை, நான்சி கரம் பிடிக்கும் போது எல்லோரும் ஆனந்த கண்ணீர் சிந்தினார்கள்.

இந்நிலையில் திருமணம் நடந்து முடிந்த ஒரு மணி நேரத்தில் கெவின் உயிரிழந்தார். இது குறித்து நான்சி கூறுகையில், கெவினை திருமணம் செய்தது என் வாழ்க்கையின் சிறந்த நிமிடம் ஆகும்.

அவர் தனது வாழ்க்கையை நேசித்து வாழ்ந்தார். என்னை தினமும் சிரிக்க வைத்தவர் கெவின்.

கெவின் முகத்தில் இறுதியாக இருந்த புன்னகை அவர் நிம்மதியாக உலகை விட்டு சென்றார் என்பதை கூறியது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்