2018ஆம் ஆண்டில் கனடாவில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள்

Report Print Balamanuvelan in கனடா

2018ஆம் ஆண்டில் கனடாவில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமண வீடியோவும் இடம்பெற்றுள்ளது.

2018ஆம் ஆண்டில் கனடாவில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களின் பட்டியலை யூடியூப் வெளியிட்டுள்ளது.

இம்முறை எத்தனைபேர் வீடியோக்களைப் பார்த்தார்கள் என்பதோடு, அவை எவ்வளவு நேரம் பார்க்கப்பட்டுள்ளன என்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அவற்றில் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ள வீடியோ, 2018 அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின்போது, Serena Williams, நடுவர் Carlos Ramosஉடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோவாகும்.

அந்த போட்டியில் அவர் ஜப்பானிய வீராங்கனையாகிய Naomi Osakaவிடம் தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கது.

ஏழாவது இடத்தில் பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமண வீடியோ உள்ளது. 2018இன் இளவேனிற் காலத்தில் கனேடியர்கள் பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் திருமணத்தில் மூழ்கிப் போனார்கள்.

இரண்டரை மணி நேரம் ஓடும் அவர்களது திருமண வீடியோ பல மில்லியன் கனடியர்களால் பார்க்கப்பட்டது.

யூடியூபில் நேரடி ஒளிபரப்பை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம், 11 மில்லியன் கனேடியர்கள் ஹரி, மேகன் திருமணத்தின் நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருந்தார்கள், திருமணம் முடிந்ததும் மீண்டும் மக்கள் அதே வீடியோவைப் பார்க்கத் தொடங்கினார்கள் என்கிறார் யூடியூப் ட்ரெண்ட்ஸ் நிபுணரான Aaron Brindle.

கனேடியர்கள் விரும்பிப் பார்த்த வீடியோக்களில் Deadpool என்ற திரைப்படத்தின் ட்ரெய்லரும் அடங்கும்.

2018ஆம் ஆண்டின் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் முதல் இடத்தைப் பிடித்த வீடியோ, To Our Daughter என்னும் வீடியோ.

அது அமெரிக்க மொடலும் தொலைக்காட்சி பிரபலமுமான Kylie Jenner என்பவர், தனது மகள் Stormi Webster தனது கர்ப்பத்திலிருக்கும்போது நிகழ்ந்த நெகிழ்ச்சி நிகழ்வுகள் பலவற்றைக் காட்டும் வீடியோவாகும்.

2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் திகதி யூடியூபில் வெளியிடப்பட்ட பதினொன்றரை நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ 76,828,640 முறை பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை காண

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers