கனடாவில் கார் ஒன்றிற்கு தீவைக்க முயன்றவர்களுக்கு ஏற்பட்ட கதி: அதிர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் கார் ஒன்றிற்கு தீவைக்க முயன்ற மூவர், எதிர்பாராதவிதமாக கார் வெடித்துச் சிதறியதில் தூக்கி வீசப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Montreal பகுதியில் உள்ள Mile Ex மாகாணத்தில் மூன்று பேர் கார் ஒன்றில் தீவைக்க முயற்சிக்கின்றனர்.

அந்த மூவரும் காருக்குள் எரிபொருளை ஊற்றியதும், ஒருவன் சற்று தொலைவுக்கு சென்று விட, மற்றொருவன் அந்த காருக்குள் குனிந்து தீப்பற்ற வைக்க முயற்சி செய்கிறான்.

அப்போது எதிர்பாராதவிதமாக, காருக்குள் குபீரென தீப்பிடிக்க, அந்த நபர் தூக்கி வீசப்படுகிறான்.

இருந்தும் அவன் சுதாரித்து எழுந்து கொள்ள, மூவரும் அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடிக்கிறார்கள்.

ஒண்டாரியோ லைசன்ஸ் பிளேட் கொண்ட அந்த கார் யாருடையது, அதில் தீவைத்த நபர்கள் யார் என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

CCTV காட்சிகளை வெளியிட்டுள்ள பொலிசார், அந்த நபர்கள் மூவரும் 20 வயதுகளில் இருப்பவர்கள் என்றும், மூவருக்கும் கைகளிலும் முகத்திலும் தீக்காயங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்றும்ம் தெரிவித்துள்ளதோடு, சம்பவம் தொடர்பாக தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் தகவலளிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers