பிரபல கனடாவாழ் பாடகி கார் விபத்தில் பலி: பிரித்தானியர்களுக்கும் மிகவும் பிடித்தமானவர்

Report Print Balamanuvelan in கனடா

நேற்று முன் தினம் கனடாவில் வாழும் பிரபல ரொமேனிய - கனடா பாடகியான Anca pop (34) கார் விபத்து ஒன்றில் பரிதாபமாக பலியானார்.

அவர் பயணம் செய்த கார் தென் மேற்கு ரொமேனியாவில் உள்ள Danube நதியில் தலைகுப்புற கவிழ்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தாயை சந்திக்கச் சென்ற தனது தங்கை இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பாததால் Ancaவின் சகோதரி பொலிசாருக்கு தகவலளித்ததின்பேரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிசார் அவரது காரைக் கண்டுபிடித்தனர்.

ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் Ancaவின் உடலை நதிக்கடியிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தனர்.

Anca 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் திகதி தென் மேற்கு ரொமேனியாவில் Danube நதிக்கரையில் உள்ள சிறு நகரம் ஒன்றில் பிறந்தார்.

பின்னர் அவரது குடும்பம் கம்யூனிஸ்ட் நாடான ரொமேனியாவிலிருந்து தப்பி இதே Danube நதியைக் கடந்து சைபீரியாவுக்கு சென்றது.

சைபீரியாவில் அவர்கள் அரசியல் அகதிகளாக, ஏழு மாதங்கள் அகதி முகாம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

பின்னர் அவரது குடும்பம் கனடாவின் ஒண்டாரியோவுக்கு புலம்பெயர்ந்தது. ஒண்டாரியோவில் வாழும்போதுதான் Ancaவுக்கு இசை மீது காதல் வந்தது. பாடகியாகி தன்னை நிலைநிறுத்தியதும் 2015ஆம் ஆண்டு ஏப்ரலில் 'free Love' என்ற ஆல்பத்தை வெளியிட்டார் Anca.

அந்த ஆல்பம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றதோடு பிரித்தானியர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

அதை சிறந்த பாப் பாடலாக தேர்ந்தெடுக்க 10,000 பேருக்கும் அதிகமான பிரித்தானியர்கள் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

எந்த நதிக்கரையில் பிறந்தாரோ, எந்த நதி வழியாக உயிர் தப்ப ஓடி வந்தாரோ, அதே Danube நதியில் தனது உயிரை விட்டிருக்கிறார் Anca.

வீடியோவை காண

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers