பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடும் புயலில் சிக்கிய நபர்: வெளியான வீடியோ

Report Print Balamanuvelan in கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவில் நேற்று வீசிய கடும் புயலின்போது பாலம் ஒன்று தகர்ந்து விழ, அதில் சிக்கி தத்தளித்த ஒருவரை ஹெலிகொப்டர் மூலம் மீட்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் நேற்று கடும்புயல் வீசியுள்ளது. இதில் White Rock பகுதியில் அமைந்துள்ள பாலம் ஒன்று சேதமடைந்தது.

மறுபக்கம் செல்ல வழியில்லாத அந்த பாலத்தில், 42 வயதுள்ள ஒரு நபர் சிக்கிக் கொண்டார்.

2 மணியளவில் பொலிசாருக்கு இது குறித்து தகவல் வரவே மீட்புக் குழுவினர் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

3.35 மணியளவில் அந்த நபர் ஹெலிகொப்டர் ஒன்றின் உதவியால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் இறக்கி விடப்பட்டார்.

அந்த பாலம் இடிந்து தண்ணீரால் அலைக்கழிக்கப்படும் காட்சிகளும், அந்த பாலத்தில் சிக்கிக் கொண்ட நபர் மீட்கப்படும் காட்சிகளும், வெளியாகியுள்ள அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers