கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை: அசத்திய கனடிய பெண்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் வாழும் பெண்ணொருவர் மிக உயரமான parsley செடிகளை வளர்த்த நிலையில் அது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

அல்பர்டாவை சேர்ந்தவர் டினா கிளின். டினாவுக்கு செடிகள் வளர்ப்பதில் அலாதி பிரியம் இருந்த நிலையில் தனது வீட்டு தோட்டத்தில் பல விதமான செடிகளை வளர்த்து வந்தார்.

இந்நிலையில் டினா வளர்த்த parsley மூலிகை செடி 8.4 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது.

இதையடுத்து குறித்த செடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இது குறித்து பேசிய டினா, இந்த விடயத்தால் என்னை விட என் குடும்பத்தினர் தான் அதிக உற்சாகத்தில் உள்ளனர். 8.4 அடி உயரத்தை செடி அடைவதற்கு ஐந்து ஆண்டுகள் ஆனது.

என்னுடைய வீட்டு தோட்டத்தில் பலவிதமான செடிகள் இருந்தாலும் இந்த செடி அளவுக்கு வேறு செடிகள் வளரவில்லை என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers