கனடா குடியுரிமை பெறும் இந்தியர்கள்: 50 சதவிதமாக அதிகரிப்பு

Report Print Kabilan in கனடா

கனடாவில் குடியுரிமை பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட 50 சதவிதம் அதிகரித்துள்ளதாக கனடா குடியுரிமை அதிகாரிகள் அளித்த புள்ளி விபரத்தில் தெரிய வந்துள்ளது.

கனடா நாட்டில் சுமார் 15,000 இந்தியர்கள் கடந்த 10 மாதங்களில் (அக்டோபர் வரை) கனடா குடியுரிமை பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 50 சதவிதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன்மூலம், கனடாவில் அதிகளவில் குடியுரிமை பெறும் வெளிநாட்டினர் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பிலிப்பைன்ஸ் (15,600 பேர்) நாடு உள்ளது.

எனினும், 2017ஆம் ஆண்டுடன் 2018ஆம் ஆண்டை ஒப்பிடும்போது கனடா குடியுரிமை பெற்ற பிலிப்பைன்ஸ் நாட்டினர்களின் எண்ணிக்கை 11 சதவிதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

ஆனால், குடியுரிமை பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை 50 சதவிதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 28,000 இந்தியர்கள் கனடா குடியுரிமை பெற்றுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers