கனடாவில் பிரபல இந்திய திரைப்பட நடிகர் மரணம்!

Report Print Kabilan in கனடா

கனடாவில் வசித்து வந்த பிரபல ஹிந்தி நடிகர் காதர் கான், உடல் நலக்குறைவு காரணமாக காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிந்தியில் சுமார் 300 படங்களுக்கு மேல் நடிகராகவும், 250 படங்களுக்கு வசனம் எழுதியும், சில படங்களை இயக்கியும் வந்தவர் பிரபல நடிகர் காதர் கான்(81).

நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் வேடங்களில் நடித்து வந்த இவர், ஆப்கானிஸ்தானின் காபூலில் பிறந்தவர். கனடாவில் வசித்து வந்த காதர் கானின் உடல்நலம், கடந்த சில மாதங்களாக மோசமானதைத் தொடர்ந்து, டொரண்டோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

காதர் கானின் உடல்நிலைக் குறித்து கேள்விப்பட்ட பிரபலங்கள் பலர் அவருக்காக பிரார்த்திப்பதாக கூறியிருந்தனர். அத்துடன் நடிகர் அமிதாப் பச்சன், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என தான் பிரார்த்திப்பதாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து காதர் கான் இறந்துவிட்டதாக வெளியான தகவலை, அவரது மகன் சர்பிராஸ் கான் நேற்று மறுத்திருந்தார்.

இந்நிலையில் கனடாவில் இன்று காலை 4 மணியளவில் காதர் கான் மரணமடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அவரது குடும்பத்தினரும் உறுதிபடுத்தியுள்ளனர். இன்று மாலை காதர் கானின் இறுதிச்சடங்கு டொரண்டோவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers